மேம்படுத்தப்பட்ட புதிய டியூரோ ஸ்கூட்டரை அறிமுகப்படு்த்திய மஹிந்திரா

Mahindra Duro DZ
தமிழகத்தில் ரூ.45,235 விலையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டியூரோ பவர் ஸ்கூட்டரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் மஹிந்திரா நிறுவனம் கைனெடிக் நிறுவனத்தை கையகப்படுத்தி இருசக்கர வாகன தயாரிப்பில் இறங்கியது.

டியூரோ, ரோடியோ, பிளைட் மற்றும் கைன் ஆகிய 4 ஸ்கூட்டர் மாடல்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், மார்க்கெட்டில் பவர் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக டியூரோ ஸ்கூட்டரின் புதிய மாடலை மஹிந்திரா நேற்று அறிமுகப்படுத்தியது.

டியூரோ டிஇசட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் நாட்டின் அனைத்து சாலை நிலைகளுக்கும் ஏற்ற வகையில் சிறப்பாக இருக்கும் வகையில் உறுதித்தன்மை மற்றும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா டூ வீலர் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த துணை தலைவர் விரேன் போப்லி கூறியதாவது:

"வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் விதத்தில் எங்களது வடிவமைப்பு நிபுணர்கள் டியூரோவை மேம்படுத்தியுள்ளனர். மேலும், இந்த ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்த ஆட்டோத்துறை நிபுணர்கள் அனைத்து வகையிலும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதிய டியூரோ டிஇசட் மாடலை பிரபலப்படுத்துவதற்காக எங்களது நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்படும் கரீனா கபூரை வைத்து விரைவில் தொலைக்காட்சி விளம்பரத்தையும் ஒளிபரப்ப உள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 13, 2011, 11:49 [IST]
English summary
Mahindra Group's two-wheeler arm Mahindra 2 Wheelers has launched the Mahindra Duro DZ a tough, powerful, fuel efficient 125 CC gearless scooter in Hyderabad. Mahindra Duro DZ is available with the price tag of Rs 45,235(Ex Showroom in Tamilnadu.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+