டியூவல் டோன் கலர்களில் ஸ்பெஷல் எடிசன் மஹிந்திரா ரோடியோ

பவர் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மஹிந்திராவின் ரோடியோ ஸ்கூட்டர்களின் விற்பனை படிப்படியாக வளர்ந்து வருகிறது. ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்சஸ் ஆகிய பவர் ஸ்கூட்டர்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையி்ல அதிக ஆற்றல் கொண்ட 125 சிசி எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா ரோடியோ.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய டியூவல் டோன் கலர்களில் ஸ்பெஷல் எடிசன் ரோடியோ ஸ்கூட்டர்களை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
ஸ்டெர்லிங் பிளாக், ஸ்கார்லெட் பிளாக் ஆகிய இரண்டு புதிய டியூவல் டோன் கலர்களில் ரோடியோ விற்பனைக்கு வந்துள்ளது. புதிய டியூவல் டோன் கலர்களில் ரோடியோ முன்பைவிட அதிக கவர்ச்சியாக இருக்கிறது.
மேலும்,டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், 4 இன் 1 ஆன்ட்டி தெப்ட் லாக், சீட்டை திறக்காமலே முன்பக்கம் எரிபொருள் நிரப்பும் வசதி, டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் ஆகிய அம்சங்களுடன் ரோடியோ கிடைக்கிறது.
நகர்ப்புற சந்தையில் ஓட்டுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள ரோடியோ தற்போது புதிய வண்ணங்களில் கிடைப்பதால் விற்பனை அதிகரிக்கும் என்று மஹிந்திரா நம்புகிறது.


Click it and Unblock the Notifications








