ஸ்டாலியோவை விரைவில் அறிமுகப்படு்த்த மஹிந்திரா திட்டம்

வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு இருசக்கர வாகன தயாரிப்பிலும் கால் பதித்தது.
முதன்முதலாக 110 சிசி திறன் கொண்ட ஸ்டாலியோ மோட்டார்சைக்கிளையும், டியூரோ ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், ஸ்டாலியோ பைக்கின் கியர் பாக்சில் அடிக்கடி பிரச்னை எழுவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து, ஸ்டாலியோ விற்பனையை நிறுத்திய மஹிந்திரா இத்தாலியை சேர்ந்த கியர் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உதவியுடன் இணைந்து கியர் பாக்ஸ் பிரச்னையை சரிசெய்தது
புதிய கியர் பாக்ஸ் கொண்ட ஸ்டாலியோ பல்வேறு சோதனைகளில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வரும் தீபாவளி பண்டிகையின்போது ஸ்டாலியோவை மீண்டும் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
ஸ்டாலியோ பைக்கின் மூலம் இருசக்கர வாகன மார்க்கெட்டில் விரைவில் முக்கிய இடத்தை பிடிப்போம் என மஹிந்திராவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
ஸ்டாலியோவை தொடர்ந்து 135 சிசி மற்றும் 155 சிசி பைக்குகளை தயாரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications








