அடுத்த மாதம் ஸ்டாலியோ பைக்கை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா

Mahindra Stalio
தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுள்ள ஸ்டாலியோ பைக்கை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய மஹிந்திரா டூ வீலர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹி்ந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு இரு சக்கர வாகன தயாரிப்பிலும் களமிறங்கியது. 110 சிசி திறன் கொண்ட ஸ்டாலியோ பைக்கை அறிமுகப்படுத்தி அதிவேகமாக வளர்ந்து வரும் இருசக்கர வாகன சந்தையிலும் இடம் பிடிக்க முனைந்தது.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக ஸ்டாலியோ பைக்கின் கியர் பாக்சில் பிரச்னை ஏற்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறி்த்து ஆய்வு செய்த மஹிந்திரா நிறுவனம் ஸ்டாலியோ பைக்கில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டு உற்பத்தியையும் உடனடியாக நிறுத்தியது.

மேலும், ஸ்டாலியோ பைக்கின் கியர் பாக்ஸ் பிரச்னையை சரிசெய்து மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று மஹிந்திரா அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இத்தாலியை சேர்ந்த பிரபல கியர் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தற்போது ஸ்டாலியோ கியர் பாக்ஸ் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது.

இதையடுத்து, அடுத்த மாதம் ஸ்டாலியோ பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,ஸ்டாலியோவின் தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுவிட்டது. அடுத்த வாரம் ஸ்டாலியோ உற்பத்தியை மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, விரைவில் ஸ்டாலியோ மீண்டும் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும். இரு சக்கர வாகன சந்தையில் முக்கிய இடம் பிடிக்க மஹிந்திரா ஆவலாக உள்ளது. இதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 26, 2011, 10:33 [IST]
English summary
The leading automotive manufacturer Mahindra and Mahindra to re-launch the 110cc Stalio bike next month. The company official said, stalio's gear box technical problem was solved and the bike production will start next week.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+