வரும் நவம்பரில் மீண்டும் ஸ்டாலியோ அறிமுகம்: மஹிந்திரா

Mahindra Stallio
வரும் நவம்பரில் மீண்டும் ஸ்டாலியோ பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 110சிசி திறன் கொண்ட ஸ்டாலியோ பைக்கை மஹிந்திரா அறிமுகம் செய்தது. பெரும் கனவுகளுடன் ஸ்டாலியோவை அறிமுகப்படுத்திய மஹிந்திராவின் கனவு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

ஸ்டாலியோவில் கியர் பாக்ஸ் பழுது ஏற்படுவதாக ஏராளமான வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஸ்டாலியோ உற்பத்தியை கடந்த சில மாதங்களுக்கு முன் மஹிந்திரா நிறுத்தியது. கியர் பாக்ஸ் தொழில்நுட்ப கோளறை நிவர்த்தி செய்து மீண்டும் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டது.

இத்தாலிய வல்லுனர்களின் உதவியுடன் ஸ்டாலியோவின் கியர் பாக்ஸ் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளை மஹிந்திரா மேற்கொண்டது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து, ஸ்டாலியோவின் சோதன ஓட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், வரும் நவம்பரில் மீண்டும் ஸ்டாலியோவை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ஸ்டாலியோ மூலம் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்தவுடன் புதிய 300சிசி பைக்கையும் மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 7, 2011, 11:59 [IST]
English summary
Mahindra & Mahindra today said it plans to relaunch its Stallio motorcycle by November after discontinuing production earlier this year due to faulty components. "Stallio is expected to be in the market again by November this year," an official of Mahindra Two Wheelers Ltd said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+