ரூ.4.57 லட்சம் விலையில் கவாஸாகி பஜாஜ் நிஞ்சா சூப்பர் பைக் அறிமுகம்

Bajaj Kawasaki Ninja
டெல்லி: பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கவாஸாகி நிஞ்சா650ஆர் சூப்பர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

பைக் ரேஸ், ஆப்ரோடு சாகச பயணங்கள், நகர்ப்புறங்கள், நெடுஞ்சாலைகள் என அனைத்து சாலை நிலைகளிலும் நிஞ்சா 650ஆர் சூப்பர் பைக்கை ஓட்ட முடியும் என்பது இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

71 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினை கொண்டுள்ளது நிஞ்சா 650ஆர். இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கை எடுக்கும்போது எடை (178 கிலோ) சற்று கூடுதலாக இருந்தாலும், சாலையில் செல்லும்போது வளைந்து நெளிந்து அனாயசமாக செல்கிறது.

இரட்டை முகப்பு விளக்குகள், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் என நிஞ்சாவின் அத்துனை அம்சங்களும் வித்தியாச வடிவமைப்பிலும், அழகாகவும் இருக்கிறது. இதன் ஸ்போர்ட்டி வடிவமைப்பு மனதை கொள்ளை கொள்கிறது.

"250 சிசி திறன் கொண்ட நிஞ்சா பைக் ஏற்கனவே சந்தையில் இருந்தாலும், புதிய நிஞ்சா 650 ஆர் பைக், ரேஸ் மற்றும் டூரர் பைக்கை விரும்பும் இளைஞர்களின் எண்ணங்களை இது பூர்த்தி செய்யும்," என பஜாஜ் ஆட்டோ மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறினார்.

புதிய நிஞ்சாவில் டிரைவிங் பொஷிசனும் சூப்பராக உள்ளது. மேலும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால் மேடுபள்ளங்களை பற்றி கவலைப்படாமல் செல்லலாம். டெல்லியில் ரூ4.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிஞ்சா லைம்கிரின் வண்ணத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 9, 2011, 11:02 [IST]
English summary
India’s second largest two-wheeler company Bajaj Auto and Kawasaki launched the highly anticipated Ninja 650R. This is could be the best news yet for the motorcycle enthusiasts this year craving for a suitable motorcycle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+