வெளிநாட்டு ஹெல்மெட்டுகளுக்கு அனுமதி தர போலீசாருக்கு கோரிக்கை

மும்பையில் கடந்த மாதம் ஐஎஸ்ஐ முத்திரை ஹெல்மெட்டுகளை மட்டும் இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து வர வேண்டும் என்று மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக் உத்தரவிட்டார். தரம் குறைந்த ஹெல்மெட்டுகளை அணிந்து வரும் வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
இதில், ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் வெளிநாட்டு தர முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்து வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாடுகளின் தர முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மும்பை போலீசிடம் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஹார்லி பைக் உரிமையாளர் தேபஷிஷ் கோஸ் கூறுகையில்,"தரம் குறைந்த ஹெல்மெட்டுகளை அணிந்து வருவதை தடுக்கவே போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
ஆனால், உலகிலேயே அதிக தரம் கொண்டதாக கருதப்படும் டிஓடி முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகளை அணிந்து வந்தாலும் போலீசார் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். எனவே, வெளிநாட்டு முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகளை அணிந்து கொள்ள அனுமதிக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








