இந்தியாவில் சூப்பர் பைக்குகள் அறிமுகப்படுத்தும் எம்வி அகஸ்ட்டா

ஹார்லி டேவிட்சன், டுகாட்டி, டிரையம்ப் வரிசையில் அடுத்து இத்தாலியை சேர்ந்த பழம்பெரும் சூப்பர் பைக் தயாரிப்பாளரான எம்வி அகஸ்ட்டா இந்தியாவில் அடியெடுத்து வைக்க உள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் முறைப்படி பைக் விற்பனையை துவங்க இருப்பதாக எம்வி அகஸ்ட்டா சிஇஓ ஜியோவன்னி கூறினார். இருப்பினும், வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது சூப்பர் பைக் மாடல்களை பார்வைக்கு வைக்க எம்வி அகஸ்ட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் எப்4 வரிசை மர்றும் எப் 3எஸ் மற்றும் புருட்டல்ஸ் ஆகிய மாடல்களை விற்பனை செய்ய எம்வி அகஸ்ட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எப் வரிசை சூப்பர் பைக்குகள் 201 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் கொண்டதாக இருக்கும்.
மற்றொரு மாடலான புருட்டல் ஆர்ஆர் 1078சிசி திறன் கொண்ட எஞ்சி்ன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 144 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








