இந்தியாவில் சீறிப்பாய வரும் பியாஜியோவின் 'ஆர்எஸ்வி-4' ரேஸ்பைக்

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் வாகன உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதன் துணை நிறுவனமான அப்ரில்லா இரு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் ஆர்எஸ்வி-4 மாடல் பைக் உலக அளவில் முத்திரை பதித்த ரேஸ்பைக் மாடலாகும். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த சர்வதேச பைக் ரேஸ்களில் 45 உலக சாம்பியன் பட்டங்களை வெல்ல காரணமாக இருந்த பெருமையும் அப்ரில்லா நிறுவனத்துக்கு உண்டு.
இந்நிலையில்,ஆர்எஸ்வி-4 பைக்கையும்,புதிய மாடல் வெஸ்பா ஸ்கூட்டரையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது பியாஜியோ நிறுவனம். இதுகுறித்து பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் (சி.எம்.டி.,)கூறியதாவது:
"இந்திய இளைஞர்கள் மத்தியில் சூப்பர்பைக்குகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.எனவே, ஆர்எஸ்வி-4 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம்.இளைஞர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் இந்த பைக்கில் உள்ளது.
இதில்,180குதிரைசக்தி திறனும் (999.6சிசி), நவீன தொழில்நுட்பமும் கொண்ட சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. நான்கு வால்வுகளை கொண்ட இந்த எஞ்சின் அதிக பிக்அப் தரவல்லது.
இதேபோன்று,இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டு, புதிய வடிவமைப்புடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 125சிசி திறன் கொண்ட வெஸ்பா ஸ்கூட்டரும் இந்திய மக்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.
ஆர்எஸ்வி 4 மாடல் பைக்கின் விலையை பியாஜியோ நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால்,இந்த ரேஸ்பைக் இந்தியாவில் ரூ.14லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலையில் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








