ஏப்ரலில் வெஸ்பா பவர் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பியாஜியோ

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் பிராண்டில் இந்தியாவில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், ஸ்கூட்டர் மார்க்கெட் இந்தியாவில் இழந்ததால் ஸ்கூட்டர் உற்பத்தியை பியாஜியோ நிறுத்தியது.
தற்போது அபே பிராண்டில் பயணிகள் மற்றும் லோடு ஆட்டோக்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் இந்தியாவில் பவர் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. இதனால், பல முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் புதிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
இந்த வரிசையில், இந்தியாவில் மீண்டும் பவர் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த பியாஜியோவும் முடிவு செய்துள்ளது. வரும் ஆண்டு ஏப்ரலில் 125சிசி திறன் கொண்ட புத்தம் புதிய பவர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக பியாஜியோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பியாஜியோ நிர்வாக இயக்குனர் ரவி சோப்ரா கூறுகையில்," வெஸ்பா பிராண்டு இமேஜின் மதிப்பை உயர்த்தும் வகையிலும், நவநாகரீக வாழ்க்கை சூழலுக்கு ஏற்ற புதிய வடிவமைப்பு கொண்ட பவர் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்படும்.
மஹாராஷ்டிரா மாநிலம் பாரமதியில் உள்ள புதிய தொழிற்சாலையில் புதிய பவர் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும். இந்த புதிய ஆலையில் ஏற்கனவே வர்த்தக வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 1.50 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும்,நாட்டின் 35 முக்கிய நகரங்களில் முதலில் டீலர் நெட்வொர்க்கை பெற முடிவு செய்துள்ளோம்.," என்றார்.


Click it and Unblock the Notifications








