லைப் ஸ்டைல் ஆக்சஸெரீஸ்களை வெளியிடும் ராயல் என்பீல்டு!

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஃபெராரி நிறுவனம் தனது சொந்த பிராண்டில் ரைடர்களுக்கு தேவையான டீ-ஷர்ட், ஷூ, ஹெல்மெட் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வெளியிட்டுள்ளது.
ஃபெராரியின் இதே பாணியை பின்பற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.
வரும் ஜனவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பைக் ரைடர்களுக்கு தேவையான ஹெல்மெட், டீ-ஷர்ட்,கையுறை, ஜெர்க்கின், ரைடிங் ஷூ, கூலிங் கிளாஸ் ஆகியவற்றை தனது சொந்த பிராண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதுதவிர, தரம் வாய்ந்த லேப்டாப் பேக், அலுவலகம் எடுத்துச் செல்வதற்கான லெதர் பேக்குகளையும் அறிமுகப்படுத்த உள்ளது.
ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், ராயல் என்பீல்டு வெளியிடும் இந்த லைப் ஸ்டைல் ஆக்சஸெரீஸ்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications








