புதிய ஆலைக்கு பணியாளர்களை நியமிக்க ராயல் என்பீல்டு தீவிரம்

நாட்டின் பழம் பெருமை வாய்ந்த நிறுவனமான ராயல் என்பீல்டு சென்னையில் ஆலை அமைத்து மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஐஷர் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ராயல் என்பீல்டு மார்க்கெட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறது.
இந்த நிலையில், தற்போது உள்ள ஆலை மூலம் மார்க்கெட் தேவையை நிறைவு செய்ய முடியாத நிலையில் ராயல் என்பீல்டு இருக்கிறது. இதனால், சென்னை அருகே ஓரகடத்தில் புதிய மோட்டார்சைக்கிள் ஆலையை அந்த நிறுவனம் கட்ட உள்ளது.
இந்த புதிய ஆலைக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞர்களை வேலைக்கு நியமிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் திறமையானவர்களை தேர்வு செய்வது சவாலாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராயல் என்பீல்டு சிஇஓ வெங்கி பத்மநாபன் கூறுகையில்,"மார்க்கெட்டுக்கும் எங்களுக்கும் உள்ள தேவையையும், எண்ணத்தையும் நிறைவு செய்யும் வகையிலான திறமையான இளைஞர்களை எங்களது நிறுவனத்தில் இணைந்துகொள்ள விரும்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








