அடுத்த ஆண்டு ஸ்கூட்டர் அறிமுகம்: யமஹா அறிவிப்பு

Yamaha Scooter
டெல்லி: அடுத்த ஆண்டு இந்தியாவில் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருப்பதாக யமஹா அறிவித்துள்ளது.

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான யமஹா, இந்திய சந்தையில் நீண்ட கால பங்களிப்பை அளித்து வருகிறது. யமஹாவின் ஸ்பீடு பைக்குகளுக்கு இந்திய சந்தையில் எப்போதுமே தனி இடம் உண்டு.

கால மாற்றத்திற்கு தக்கவாறு, இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொண்டு பல்வேறு மாடல்களில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு ஏற்பட்டுள்ள மவுசை கருத்தில்கொண்டு, புதிய ஸ்கூட்டரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப் போவதாக யமஹா அறிவித்துள்ளது.

இதுகுறித்து யமஹா இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:

"இந்தியாவில் ஸ்கூட்டர்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. இதைக்கருத்தில்கொண்டு, அடுத்த ஆண்டு புதிய ஸ்கூட்டர் மாடலை இந்தியாவி்ல அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஸ்கூட்டர் தயாரிப்புக்கென உத்தரபிரதேசத்தில் ரூ.10 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிறுவனத்தின் மொத்த விற்பனையும் அதிகரிக்கும்.

இந்திய சந்தையில், தற்போதுள்ள ஸ்கூட்டர் மாடல்களை விட எங்களது ஸ்கூட்டர் வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறந்து இருக்கும். தற்போதைக்கு புதிய ஸ்கூட்டர் பற்றி மேலும் தகவல்களை கூற இயலாது. இதுதவிர, எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 7, 2011, 9:21 [IST]
English summary
The Japanese auto giant Yamaha said it will be launching a scooter for the Indian market in the next year with a plant for it to be ready in UP at an investment of Rs10 crore.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+