ஹோண்டாவின் புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்

Honda Chopper
ஸ்டார் வார் படத்தில் வரும் சூப்பர் பைக் போன்ற புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் பைக்கை ஹோண்டா வடிவமைத்துள்ளது. இதன் முக்கிய அம்சமே சக்கரங்களில் மோட்டார் பொருத்தப்பட்டிருப்பதுதான்.

ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா சிறந்து விளங்குகிறது. கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பில் பல்வேறு நாடுகளில் ஹோண்டா முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், எதிர்கால சந்தையை கருத்தில்க்கொண்டு புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்கை ஹோண்டா வடிவமைத்துள்ளது. இந்த கான்செப்ட் மாடல் பைக்கை பீட்டர் நோரிஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.

ஸ்டார் வார்ஸ் ஹாலிவுட் சினிமாவில் வரும் சூப்பர் பைக்கை பார்த்து பிரமித்து இந்த சூப்பர் பைக்கை வடிமைத்ததாக அவர் கூறினார். இந்த சூப்பர் பைக் கான்செப்ட்டிற்கு ஹோண்டா சாப்பர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கான்செப்ட் பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த மின் மோட்டார்கள் சக்கரங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் வகையில் இந்த கான்செப்ட் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எலக்ட்ரிக் பைக்காக மட்டுமின்றி சூப்பர் பைக்காகவும் ஹோண்டா தெரிவிக்கிறது. இதற்காக, அதிக திறன் வாய்ந்த பேட்டரிகள் இதில் பொருத்தப்பட்டிருக்கும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

மிகுந்த ஆவலைத் தூண்டியுள்ள இந்த பைக்கை வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்தும் நோக்கம் இல்லை என்று ஹோண்டா தெரிவித்துள்ளதுதான் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கான்செப்ட் மாடல் பைக்கை பல்வேறு கோணங்களி்ல் காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2011, 14:38 [IST]
English summary
Honda has been a pioneer in automotive engineering and here is proof it is still the leader. What you are looking at is not an image of a alien ship or vehicle used in movies. Rather is it is a concept vehicle that has taken inspiration from the Hollywood movie Star Wars. Named as the Honda Chopper, this futuristic concept vehicle has been designed b Peter Norris.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+