சுஸுகியின் புதிய இனஸுமா 250சிசி பைக்

பிரிட்டனில் நடந்த பர்மிங்ஹாம் ஆட்டோ கண்காட்சியில் இனஸுமா(ஜப்பானிய மொழியில் மின்னல் என்று அர்த்தம்) என்று பெயரிடப்பட்ட தனது புதிய 250சிசி பைக்கை சுஸுகி நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது.
இதற்கு முன்னர் சீனாவில் இந்த பைக் ஜிடபிள்யூ-250 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜனவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த பைக் பார்வைக்கு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
248 சிசி எஞ்சின் கொண்ட இந்த பைக் அதிக மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழலுக்க உகந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.
கட்டுறுதியான ப்ரேம், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக், அதிக தரத்துடன் கூடிய கட்டுமானம் ஆகியவை பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்கும். இதன் வடிவமைப்பும் மற்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளிலிருந்து சற்று மாறுபட்டதாக இருக்கிறது.
இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இனஸுமா பார்வைக்கு வைப்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.
இருப்பினும், இந்த புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் கவாஸாகி நிஞ்சா 250ஆர், ஹோண்டா சிபிஆர்250ஆர் மற்றும் ஹயோசங் ஜிடி 250 ஆகிய ஸ்போர்ட்ஸ் பைக்குளுக்கு போட்டியை கொடுக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








