இந்தியாவில் புதிய குரூஸர் பைக்கை களமிறக்கும் சுஸுகி

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்திய பைக் மார்க்கெட்டில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், அடுத்தடுத்து புதிய பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும் தீபாவளி பண்டிகையின்போது புதிய 250சிசி பைக்கை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், தற்போது அந்த நிறுவனம் புதிய குரூஸர் பைக்கை தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இன்ட்ரூடர் எம்-1800 என்ற குரூஸர் பைக்கை சுஸுகி விற்பனை செய்து வருகிறது. ஆனால், ரூ.15 லட்சம் என்ற அதன் விலையை கேட்டவுடன்தான் கேட்டவுடன் தலைதெறிக்க ஓட வேண்டியிருக்கிறது.
எனவே, குறைந்த விலையில் புதிய குரூஸர் பைக்கை வரும் தீபாவளி பண்டிகையின்போது சுஸுகி அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.
இன்ட்ரூடர் எம்-800 என்ற பெயரில் வரும் இந்த பைக்கில் 805 சிசி விட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 53 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டிருக்கும்.
பார்ப்பதற்கு இன்ட்ரூடர் எம்-1800 பைக்கை ஒத்திருந்தாலும் சிற்சில மாற்றங்களுடன் இந்த பைக் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய சைலன்சர், குரோம் பூச்சு கொண்ட பெட்ரோல் டேங்க் ஆகியவை புதிய இன்ட்ரூடரின் கூடுதல் அம்சங்கள். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் முன்சக்கரத்தில் இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.
நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் இதன் இருக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் ரூ.6 லட்சம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது சுஸுகி விற்பனை செய்து வரும் இன்ட்ரூடர் எம்-1800ஐவிட ரூ.9 லட்சம் வரை குறைவான விலையில் இந்த பைக் வர இருப்பதால் நல்ல வரவேற்பை பெறும் என்று சுஸுகி வட்டார தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








