உள்நாட்டில் தயாரான கார்பன் ஃபைபர் சைக்கிள்கள்: டிஐ அறிமுகம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முருகப்பா குழுமத்தின் அங்கமான டிஐ நிறுவனம் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இலகு எடையுடன் அதிக உறுதி வாய்ந்த சைக்கிள்களை டிஐ நிறுவனம் தயாரித்துள்ளது. மோன்ட்ரா என்ற பிராண்டில் இந்த புதிய கார்பன் ஃபைபரில் உருவாக்கப்பட்ட சைக்கிள்களை டிஐ அறிமுகம் செய்துள்ளது.
மோன்ட்ரோ டெக்னோ, மோன்ட்ரோ ஜாஸ் மற்றும் மோன்ட்ரோ கன்ட்ரி என்ற மூன்று மாடல்களி்ல இந்த புதிய சைக்கில் மாடல்கள் மார்க்கெட்டிற்கு வந்துள்ளன. இந்த புதிய சைக்கிள் மாடல்கள் ரூ.21,000 முதல் ரூ.60,000 விலையில் விற்பனை செய்யப்படும் என்று டிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஐ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரகுராம் கூறியதாவது:
"நகர்ப்புற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த எடை கொண்ட இந்த சைக்கிள்கள் அறிமுகம் செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,500 கார்பன் ஃபைபர் சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்,"என்றார்.


Click it and Unblock the Notifications








