பஜாஜ், டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்ந்தது

மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்புக்கு தேவையான ஸ்டீல்கள், ரப்பர் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி செலவீனம் உயர்ந்ததால் பைக் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களின் விலையை திடீரென உயர்த்தியுள்ளன.
டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் கோயிந்தி கூறுகையில்,"உற்பத்தி செலவீனம் கைக்கு மீறி சென்றதால், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ விலையை 1.5 முதல் 2 சதவீதம் உயர்த்தியுள்ளோம். கடந்த வாரம் முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தவிர, வரும் ஜூன் மாதம் மீண்டும் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்," என்றார்.
பைக் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் நிறுவனமும் மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பைக் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஹீரோ ஹோண்டா நிறுவனம் விலை உயர்த்துவதற்காக, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








