புதிய பல்சருக்கு போட்டியாக புதிய அப்பாச்சியை களமிறக்குகிறது டிவிஎஸ்

Tvs Apache
ஆர்ப்பாட்டமான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி மாடலை விரைவில் அறிமுகப்படுத்த டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக அப்பாச்சி ஆர்டிஆர் திகழ்கிறது.

160 மற்றும் 180 சிசி மாடல்களில் கிடைக்கும் அப்பாச்சி ஆர்டிஆர் ஸ்போர்ட்ஸ் பைக் ரசனையாளர்களின் விருப்பத்தை கனக்கச்சிதமாக பூர்த்தி செய்கிறது.

மேலும், 180 சிசி பைக் மாடலில் முதன்முறையாக ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன்(ஏபிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டுள்ள பைக் அப்பாச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கம்பீரமான வடிவமைப்பு, பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் அப்பாச்சி சிறப்பாக செயல்படுவதால் இளைஞர்களிடையே அப்பாச்சிக்கு தனி வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், கூடுதல் அம்சங்களுடன் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை விரைவில் டிவிஎஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த தலைமுறைக்கான வடிவமைப்புடனும் கூடுதல் சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் புதிய அப்பாச்சி வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில வாரங்களில் புதிய அப்பாச்சி டிவிஎஸ் ஷோரூம்களை வந்தடையும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த தலைமுறைக்கான அம்சங்களுடன் புத்தம் புதிய பல்சரை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டிவிஎஸ் நிறுவனமும் புதிய அப்பாச்சியை அறிமுகப்படுத்த இருப்பதாக வெளியான தகவல்கள் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் சூட்டை கிளப்பியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, November 7, 2011, 10:20 [IST]
English summary
Chennai based country's leading two wheeler manufacturer Tvs motors all set to launch brand new Apache sports bike soon. The new apache will come revamped next generation styling design and blendy performance. The new apache will give tough competition to upcoming new bajaj pulsar.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+