கடந்த நிதியாண்டில் டி.வி.எஸ்., லாபம் இரண்டு மடங்கு உயர்வு

TVS Motors
சென்னை: கடந்த நிதியாண்டில் டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின் லாபம் இரண்டு மடங்காக உயர்ந்தது.

கடந்த 2010-11 நிதியாண்டில் டி.வி.எஸ்., நிறுவனம் ரூ.192.58 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டு (2009-10) நிகர லாபத்துடன் (ரூ,88கோடி) ஒப்பிடுகையில், இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஜனவரி-மார்ச் இடையிலான நான்காம் காலாண்டில் ரூ.41.68 கோடியை அந்த நிறுவனம் நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய நிகர லாபத்துடன் (ரூ.20.29 கோடி)ஒப்பிடும்போது அதுவும் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 20 லட்சம் மோட்டார்சைக்கிள்களை டி.வி.எஸ்., நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையுடன்(8.33 லட்சம்) ஒப்பிடும்போது, 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் டி.வி.எஸ்., ஏற்றுமதி 45 சதவீதமாக உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் அந்த நிறுவனம் 2.39 லட்சம் மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 39,200 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது டி.வி.எஸ்., இது அதற்கு முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 1, 2011, 11:46 [IST]
English summary
TVS Motor Company's net profit for the January-March quarter of 2010-11 doubled to Rs 41.68 crore, the company reported. In the corresponding quarter of last year, net profit was Rs 20.29 crore. Net profit for the full year of last fiscal 2010-11 too doubled, to Rs 192.58 crore, from Rs 88 crore in the previous year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+