காஸ்மெட்டிக் மாற்றங்களுக்கு புதிய ஸ்கூட்டியை களமிறக்கியது டிவிஎஸ்

இதனால், தற்போது ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் அடிதடியே நடந்து வருகிறது. எண்ணற்ற ஸ்கூட்டர் மாடல்கள் மார்க்கெட்டில் வரிசை கட்டி நின்றாலும், ஸ்கூட்டர் வாங்கும்போது அனைவரது நினைவிலும், நாவிலும் முதலில் வருவது ஸ்கூட்டிதான் என்றால் மிகையாது.
குறிப்பாக, காலேஜ் படிக்கும் பெண்களின் எவர்கிரீன் பேவரைட் ஸ்கூட்டிதான். எனவே, அவர்களின் தலைமுறை மாற்றத்தின் எண்ணங்களுக்கு தக்கவாறு ஸ்கூட்டியை மெருகூட்டி அறிமுகப்படுத்துவதற்கு டிவிஎஸ் தவறுவதில்லை. அந்த வகையில் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் புதிய எடிசன் ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கை டிவிஎஸ் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்கூட்டி ஸ்ட்ரீக் மேம்படுத்தப்பட்ட மாடலில் கருப்பு மற்றும் சிவப்பில் இழைத்து கொடுக்கப்பட்டுள்ள பாடி கிராபிக்ஸ் டிசைன் கண்களை விட்டு அகல மறுக்கிறது. அந்த அளவுக்கு கலர் காம்பினேஷன் வெகு அழகாக ஸ்கூட்டி ஸ்ட்ரீக்குக்கு பொருந்தியுள்ளது.
இது நிச்சயம் சாலையில் செல்லும்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று ஆணித்தரமாக கூறலாம். சொகுசு சவாரியை கொடுக்கும் வகையில் இருக்கையின் அமைப்பிலும் கைவைத்துள்ளது டிவிஎஸ்.
மேலும், அதிக ரோடு கிரிப்பை வழங்கும் வகையில் பழையை ஸ்கூட்டியைவிட சற்று அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கின் 90 சிசி எஞ்சின் 5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளதால் சாலையில் ரெக்கை கட்டி பறக்க போதுமானது.
எப்போதுமே மற்ற ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது இலகு எடை மற்றும் அடக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளதால் பெண்களுக்கு ஏற்ற கையாளுமை கொண்ட ஸ்கூட்டராக ஸ்கூட்டி விளங்குகிறது. மேலும், மொபைல் சார்ஜர், கிளவ் பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் கல்லூரிக்கு எடுத்து செல்ல தகுதியான ஸ்கூட்டர் என்று எண்ணத்தை வரவழைக்கிறது.
ஸ்கூட்டி ஸ்ட்ரீக் மாடலின் இது புதிய கலர் மட்டுமே என்பதால், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அதே விலையில் இந்த புதிய கலர் ஸ்ட்ரீக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








