ஆட்டோ உற்பத்தியை கணிசமாக உயர்த்துகிறது டிவிஎஸ்

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் டிவிஎஸ் நிறுவனம் மூன்று சக்கர வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.
அந்த நிறுவனத்தின் கிங் ஆட்டோவுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு கூடி வருகிறது. எனவே, கிங் ஆட்டோவின் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கிறது டிவிஎஸ்.
இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் எச்எஸ்.கோயிந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தற்போது மாதத்திற்கு 6,000 மூன்று சக்கர வாகனங்களை(ஆட்டோ) உற்பத்தி செய்து வருகிறோம். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மாதத்திற்கு கூடுதலாக 2,000 ஆட்டோக்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், மொத்தமாக மாதத்திற்கு 8,000 ஆட்டோக்கள் உற்பத்தி செய்யப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் 3,626 ஆட்டோக்களை விற்பனை செய்தோம். ஆனால், கடந்த மாதம் 4,714 ஆட்டோக்களை விற்பனை செய்துள்ளோம். விற்பனை 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதால், தேவையை கருத்தில்க்கொண்டு ஆட்டோ உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








