ஜூனில் மோட்டார்சைக்கிள் விற்பனை 16% அதிகரிப்பு

New Glamour FI
டெல்லி: கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு கார் விற்பனை குறைந்துள்ள நிலையில், மோட்டார்சைக்கிள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மோட்டார்சைக்கிள் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் மொத்தம் 8,80,000 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 7,61,000 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி இருந்தது.

பெட்ரோல் விலை உயர்வால், கார் வாங்கும் எண்ணம் குறைந்து மோட்டார்சைக்கிள்களின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளதாக ஆட்டோ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஹீரோஹோண்டா நிறுவனம் மாதாமாதம் 5 லட்சத்திற்கும் மேல் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது.

இதேபோன்று, டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனையும் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1,39,905 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 1,55,296 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, விகோ ஸ்கூட்டரின் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 1,45,973 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 1,48,937 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

யமஹாவின் விற்பனை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 21,157 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த அந்த நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 27,263 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 3, 2011, 14:35 [IST]
English summary
Countries Two-wheelers sales are witnessing a more positive trend. It was reported that sales of six of the eight domestic motorcycle manufacturers rose 16 per cent in June to over 880,000 units, compared to 761,000 units in June 2010.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+