ஸ்போர்ட்ஸ் பைக் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் கோலி நியமனம்:டிவிஎஸ்

Virat Kohli
சென்னை: டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட் பைக்கின் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம் இரு சக்கர வாகன விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. மேலும், விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை டிவிஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தனது 100சிசி ரகத்தை சேர்ந்த ஸ்போர்ட் பைக்கின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை டிவிஎஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய பைக்கின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான வீராட் கோலியை விளம்பர தூதராக டிவிஎஸ் நியமனம் செய்துள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் கூறியதாவது:

"எல்க்ட்ரிக் ஸ்டார்ட்டர் உள்ளிட்ட புதிய அம்சங்கள் கொண்ட ஸ்போர்ட் பைக் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய ஸ்போர்ட் பைக்கை பிரபலபடுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த பைக்கின் விளம்பர தூதராக இளம் நட்சத்திர வீரர் வீராட் கோலியை நியமித்துள்ளோம்.

வீராட் கோலி டிவி விளம்பரங்கள் மூலம் ஸ்போர்ட் பைக்கை பிரபலபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவார். வீராட் கோலி ஸ்போர்ட் பைக்கின் விளம்பர தூதராக நியமித்ததில் பெருமையடைகிறோம்," என்று கூறினார்.

இதுகுறித்து வீராட் கோலி கூறுகையில்,"டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அளிக்கிறது,"என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2011, 15:27 [IST]
English summary
TVS Motor Company has roped in Indian cricket star Virat Kohli as Brand Ambassador for its Sport range of motorcycles. "TVS Motor Company has signed on one of India's brightest and most promising cricketing talents, Virat Kohli as brand ambassador for its all new TVS Sport motorcycle. Kohli will feature on all advertising and retail material related to TVS Sport", Chennai-based TVS Motor Company said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+