இந்திய சாலைகளை கிழிக்க வரும் விரஸ் சூப்பர் பைக்குகள்

vyrus Super Bike
டெல்லி: மிரட்டும் தோற்றத்துடன் இந்திய சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்ல வரப்போகிறது விரஸ் சூப்பர் பைக்குகள்.

இத்தாலியை சேர்ந்த விரஸ் நிறுவனம், சூப்பர் பைக் தயாரிப்பில் பிரபலமான பிமோட்டா நிறுவனத்துடன் இணைந்து சூப்பர் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், பிமோட்டா நிறுவனத்திலிருந்து பிரிந்த விரஸ், தற்போது தனியாக சூப்பர் பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

பிமோட்டா மற்றும் டுகாட்டி நிறுவனங்களிலிருந்து அனுபவம் வாய்ந்த எஞ்சினியர்களை பணிக்கு அமர்த்தி புதிய சூப்பர் பைக்குகளை விரஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் விரைவில் தனது சூப்பர் பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது விரஸ்.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் விரஸ் பைக்குகள் இந்தியாவிற்கு வருகின்றன. கார்பன் பிரேம்கள் கொண்டு தயாரிக்கப்படும் விரஸ் பைக்குகள் இலகுவான எடை கொண்டதாக இருப்பதால் கையாள்வதில் சிரமமிருக்காது. மேலும், ரேடிக்கல் ஹப், சென்டர் ஸ்டீயரிங் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட விரஸ் பைக்குகள் இந்திய சந்தையில் நிலையான இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

விரஸ் நிறுவனத்தின் 984 சி3 4வி பொருத்தப்பட்டுள்ள டுகாட்டி எஞ்சின் 90.5 பிஎச்பி அதிகபட்ச ஆற்றலையும், 985 சி3 4 வி மாடலில் பொருத்தப்பட்டுள்ள டுகாட்டி எஞ்சின் 105 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தும் வல்லமை பெற்றது.

இதுதவிர, 987 சி3 4வி மாடலில் மூன்று பைக்குகளை தயாரிக்க விரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 170பிஎச்பி /163 கிலோ, 184பிஎச்பி / 158 கிலோ, மற்றும் சூப்பர் சார்ஜ்டு டாப் எண்ட் ரகத்தில் 211பிஎச்பி /154 கிலோ மாடல்களில் அவை தயாரிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.ஆனால், இதுபற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

விரஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சூப்பர் பைக்குகள் இந்தியாவில் ரூ.22 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2011, 12:10 [IST]
English summary
taly’s Rimini based exotic superbike maker Vyrus is planning to launch its motorcycles in India. The company is known for the radical, futuristic styling of its bikes, and for its use of the most exclusive and lightweight materials in making its bikes, which make them some of the most expensive things on two wheels.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+