சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய சக்தி பைக்:புனே எலக்ட்ரீசியன் சாதனை

சூரிய சக்தியை பேட்டரியில் சேமித்து, எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த பைக்கில், முழு சார்ஜ் செய்தவுடன் 50 முதல் 60 கி.மீ. செல்ல முடியும். சூரிய சக்தி தீர்ந்துவிட்டால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்று பேட்டரியில் இயங்கும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாத உலகின் முதல் சோலார் பைக் இதுதான் என்று அயூப் கான் பதான் பெருமையுடன் தெரிவித்தார்.
சோலார் பைக் குறித்து அயூப் கான் பதான் கூறியதாவது:
"எனது சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மூன்று மாத கடின உழைப்பில் இந்த சோலார் பைக்கை உருவாக்கியுள்ளேன். எலக்ட்ரிக் பைக்கான இதை சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பேட்டரிகள் பொருத்தி மாற்றி அமைத்துள்ளேன்.
இந்த பைக்கை தயாரிப்பதற்கு ரூ.26,000 வரை செலவானது. ஆனால், அதிக அளவில் தயாரிக்கும்போது இதன் விலை ரூ.16,000க்குள் இருக்கும். மேலும், சூரிய மின்சக்தியை மிச்சப்படுத்தும் வகையில், முகப்பு மற்றும் டேஞ்சர் விளக்குகளில் எல்.இ.டி. பல்புகளை பொருத்த முடிவு செய்துள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications








