புதிய 100சிசி பைக்குகளை அறிமுகப்படுத்த யமஹா திட்டம்

Yamaha crux BR
கிராமப்புற சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக குறைந்த விலையில் புதிய 100 சிசி பைக்குகளை அறிமுகப்படுத்த இருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் நகர்ப்புற சந்தையில் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. யமஹாவின் பிரிமியம் ரக பைக்குகளுக்கு நகர்ப்புற சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில், கிராமப்புற சந்தையிலும் வலுவான இடத்தை பிடிக்க யமஹா திட்டமிட்டுள்ளது. இதற்காக, குறைந்த விலையில் புதிய 100 சிசி ரக பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது.

தற்போது யமஹா விற்பனை செய்து வரும் 100சிசி ரகத்தை சேர்ந்த கிரக்ஸ் பைக்குக்கு கிராமப்புற சந்தையில் நல்ல அறிமுகம் இருக்கிறது. எனவே, கிரக்ஸ் பைக்கை மறுவடிவமைப்பு செய்து விரைவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதை தவிர்த்து, புதிய 100சிசி பைக்குகளையும் அறிமுகம் செய்யும் திட்டத்தையும் யமஹா வைத்துள்ளது. பஜாஜ் நிறுவனம் கிராமப்புற சந்தையை கருத்தில்க்கொண்டு சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதைபோன்றே, மேம்படு்ததப்பட்ட கிரக்ஸ் மூலம் சந்தையை பிடிக்க யமஹா ஆயத்தமாகி வருவதாக ஆட்டோத்துறையினர் கூறுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 20, 2011, 11:46 [IST]
English summary
Yamaha, the Japanese two wheeler manufacturer is now looking the rural markets in India to boost sales after gaining a foothold in the urban market. The company is planning to launch more models that are affordable in the near future. A senior official of India Yamaha Motor said: “We have so far seen good sales in urban areas, mainly in the big cities due to our image as a premium bike-maker. Now to further accelerate growth, we will strengthen our presence in the rural markets.”
மேலும்... #yamaha #automobiles #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+