ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த யமஹா திட்டம்?

By
Yamaha
டெல்லி: ஸ்கூட்டர் மற்றும் சக்திவாய்ந்த பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள யமஹா நிறுவனம், ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை இமாலய வளர்ச்சி கண்டு வருகிறது.இதற்கு தக்கவாறு,புதிய பாதையில் பயணிக்க யமஹா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.இந்திய மார்க்கெட்டில் ஸ்கூட்டர்கள் மற்றும் அதிக சக்தி கொண்ட பைக்குகளை அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளது.

ஆனால்,வரும் பட்ஜெட்டில் வாகனங்கள் மற்றும் வாகன உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால், கலக்கத்தில் உள்ளது யமஹா.

இதுகுறித்து யமஹா தலைவர் கூறியதாவது:

"இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தக்கவாறு,புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.ஆனால்,வாகன உற்பத்திக்கு தேவையான இரும்பு உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களுக்கு பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால்,இது கண்டிப்பாக விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே,வாகன உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு கலால் வரியிலிருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும்.அப்போதுதான் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி சீராக இருக்கும்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, February 18, 2011, 12:42 [IST]
English summary
Yamaha Motor from Japan is making new moves in its Indian presence with launching new variants of its bikes of higher end models. Yamaha has been contemplating to ride into the scooter segment in India and simultaneously the company’s Business Head,has made some cry to the government here. He said the auto industry tasted a decent growth in 2010 fiscal and if such a growth has to be carried over this year too the government shall leave the excise duty undisturbed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+