ஃபோர்டு பிகோவுக்கு ஜிக் வீல்சின் சிறந்த கார் விருது

ஆட்டோமொபைல் சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் எகானமிக் டைம்ஸ் பத்திரிக்கையின் வார இதழான ஜிக்வீல்ஸ் முன்னிலை வகிக்கிறது.
ஆட்டோமொபைல் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது ஜிக்வீல்ஸ்.
இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது.இதில்,இந்த ஆண்டின் சிறந்த காருக்கான விருதை ஃபோர்டு பிகோவும்,சிறந்த பைக்குக்கான விருதை யமஹா எஸ்இசட்-எக்சும் பெற்றன.
விழாவில் பேசிய ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் கூறுகையில்,'பிகோ காருக்கு அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்த வாடிக்கையாளர்களுக்கும்,எங்கள் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த விருதை சமர்பிக்கிறோம். அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களில் 60,000 பிகோ கார்கள் விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது' என்றார்.
சிறந்த பைக் தயாரிப்பாளருக்கான விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஹீரோ ஹோண்டா நிறுவனம் தக்கவைத்துக் கொண்டது. இதேபோன்று, சிறந்த கார் தயாரிப்பாளருக்கான விருதை டொயோட்டோ நிறுவனம் பெற்றது.
சிறந்த வெளிநாட்டு சொகுசு காருக்கான விருதை பிஎம்டபிள்யூ காரும், சிறந்த உள்நாட்டு சொகுசு காருக்கான விருதை டாடாவின் ஜாக்குவார் எக்ஸ்எஸ் காரும் பெற்றன. சிறந்த எஸ்யூவீ ரக காருக்கான விருது ஸ்கோடா நிறுவனத்தின் காருக்கும், சிறந்த காம்பக்ட் ரக காருக்கான விருதை வோல்க்ஸ்வேகனுக்கும் கிடைத்தது.


Click it and Unblock the Notifications








