இளசுகளை சுண்டி இழுக்கும் யமஹாவின் 'எஸ்இசட்-ஆர்'

சாலைகளில் சீறிப்பாயும் 150 சிசி திறன் கொண்ட ஸ்போர்ட்டி ரக பைக்குகளுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 150 திறன் கொண்ட எஸ்இசட் வரிசை ஸ்போர்ட்டி ரக பைக்குகளை களமிறக்கியது யமஹா நிறுவனம்.
இதைத்தொடர்ந்து,அடுத்த லைட் ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது யமஹா. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்இசட்-எக்ஸ் பைக்கி்ன் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளிவந்துள்ள இந்த பைக்,எஸ்இசட்-ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
153 சிசி திறன் கொண்ட இந்த பைக் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. இன்ஜின் சுழுல் திறனை காட்டும் டாக்கோமீட்டர், பின்னால் வருபவர்க்கு தெளிவாக தெரியும் வகையில் இன்டிகேட்டரில் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சங்கள்.
இதன் கிராபிக் டிசைனர்கள் கண்ணை கவருகின்றன. ஸ்டைல் விரும்பிகளின் தாகத்தை போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் பளபளக்கும் குவாலிட்டி பிளாக், குவாலிட்டி ரெட், குவாலிட்டி புளு ஆகிய மூன்று மெட்டாலிக் கலர்களில் கிடைக்கிறது. இதன் விலை 55,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








