10 சீட்டர் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்: வீடியோ

10 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நீண்ட ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் ஜெர்மனியின் எஸ்ஸன் நகரில் நடைபெறும் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஹாப்கின்ஸ் என்பவர்தான் இந்த மோட்டார்சைக்கிளின் உரிமையாளர். கடந்த 2009ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள் தற்போது ஆட்டோ ஷோவுக்காக அமெரிக்காவிலிருந்து நீண்ட பயணத்திற்கு பிறகு ஜெர்மனிக்கு வந்துள்ளது.

அடேங்கப்பா..!!

அடேங்கப்பா..!!

இந்த மோட்டார்சைக்கிள் 25 அடி நீளம் கொண்டது. 3000 பவுண்டுகள் எடை கொண்ட இந்த மோட்டார்சைக்கிளில் 10 பேர் அமர்ந்தால் மொத்த எடை தோராயமாக 5,000 பவுண்டுகளாக இருக்கும் என்கிறார் ஸ்டீவ் ஹாப்கின்ஸ்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் 7 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 1923, 1944, 1946,1948, 1981 மற்றும் 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 1,200 சிசி 'வின்டேஜ்' எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம். இந்த எஞ்சின்கள் மிகுந்த சிரத்தையுடன் நுணுக்கமாக ட்யூனிங் செய்யப்பட்டிருப்பதால் சிறப்பாக இயங்குகின்றன. இதுதவிர, 7 வதாக நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின் இயக்கம்

எஞ்சின் இயக்கம்

இந்த மோட்டார்சைக்கிளில் 7 எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் எஞ்சின்களை இயக்குவதில் பிரச்னை இருக்கிறது. அருகருகே எஞ்சின்கள் இருப்பதால் சூடாகி தீப்பற்றும் ஆபத்து இருப்பதால் குறைந்த தூரம் செல்லும்போது மட்டுமே ஒரே நேரத்தில் 7 எஞ்சின்களையும் இயக்க முடியும். அதிக தூரம் செல்ல வேண்டுமெனில், பின்புறம் பொருத்தப்பட்டிருக்கும் பவர்ஃபுல் எஞ்சினில் மட்டுமே செலுத்த முடியும்.

கிளட்ச் பிளேட்

கிளட்ச் பிளேட்

1000 சிசி எஞ்சின் திறனை சமாளிக்கும் திறனும், பிரத்யேக தொழில்நுட்பமும் கொண்ட கிளட்ச் பிளேட் பொருத்தப்பட்டிருக்கிறது.

டர்னிங் ரேடியஸ்

டர்னிங் ரேடியஸ்

இந்த மோட்டார்சைக்கிளை திருப்புவதற்கான 'டர்னிங் ரேடியஸ்' 60 அடி.

 நடமாடும் மியூசியம்

நடமாடும் மியூசியம்

இந்த மோட்டார்சைக்கிளின் பிரேம், மட்கார்டு உள்ளிட்ட இடங்களில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் வரலாறு குறித்த அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

 ஓட்டுவதில் சிரமம்

ஓட்டுவதில் சிரமம்

10 பேர் அமர்ந்து செல்லும்போது இந்த பைக்கை ஓட்டுவது மிகுந்த சிரமமாக இருப்பதாக ஸ்டீவ் ஹாப்கின்ஸ் கூறுகிறார்.

வீல்கள்

வீல்கள்

முன்புறம் இரண்டு வீல்களும், பின்புறத்தில் இரண்டு வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன. பேலன்ஸ் கருதி மோட்டார்சைக்கிளின் நடுவில் சிறிய வீல்கள் இரண்டும் பொருத்தப்பட்டுள்ளன.

பல 'வின்' நம்பர்கள்

பல 'வின்' நம்பர்கள்

இந்த மோட்டார்சைக்கிளில் பல ஃபிரேம்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் தனித்தனியாக பல 'வின்' நம்பர்களை கொண்டிருக்கிறது.

எரிபொருள் டேங்க்

எரிபொருள் டேங்க்

இந்த மோட்டார்சைக்கிளில் 9 கேலன் பெட்ரோல் நிரப்பலாம்.

வீடியோ

More from DriveSpark

Article Published On: Monday, December 3, 2012, 15:32 [IST]
English summary
Ever wondered about 10 seater Harley Davidson bike. Steve Hopkins has built the 10 seat and seven engine Harley Davidson bike. Here we are giving some pictures and video of that 10 seater Harley Davidson bike.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+