இருங்காட்டுகோட்டை ரேஸ் ட்ராக்கில் தீவிபத்து: 45 ஸ்போர்ட்ஸ் பைக்குகள் நாசம்
இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 45 யமஹா ஸ்போர்ட்ஸ் பைக்குகள் தீயில் கருகி நாசமானது.
சென்னை அருகேயுள்ள இருங்காட்டு கோட்டை ரேஸ் ட்ராக்கில் ஆர்15 ஸ்போர்ட்ஸ் பைக்குகளை பிரபலபடுத்தும் விதமாக யமஹா ஆர்15 ஒன் மேக் சாம்பியன்ஷிப் ரேஸ் யமஹா நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளை யமஹா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அடுத்த மாதம் 8ந் தேதி முதல் 11ந் தேதி வரை போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்காக, ரேஸ் ட்ராக் வாகன நிறுத்துமிடத்தில் 45 ஆர்15 பைக்குகளை யமஹா கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பைக்குகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பைக்குகள் நிறுத்தியிருந்த இடம் அருகில் ரேஸ் கார் ஒன்றை வெல்டிங் செய்துள்ளனர். அப்போது, பறந்த தீப்பொறிகளால் அந்த ரேஸ் காரில் திடீரென தீப்பற்றியுள்ளது
வேகமாக பரவிய தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைடிக்குகள் மீதும் பட்டு தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி அனைத்து பைக்குகளும் தீப்பித்து எரிந்து முற்றிலும் நாசமானது. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததால், பைக்குகளை வெளியில் எடுக்க முடியாமல் போனதாக மோட்டார் விகடன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள்ளாகவே பைக்குகள் முற்றிலும் கருகி எலும்பு கூடாக மாறிவிட்டன. இந்த தீவிபத்தில் நாசமான மதிப்பு ரூ.60 லட்சம் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








