துப்பாக்கியில் கலக்கிய ராயல் என்பீல்டு புல்லட்: சிறப்பு தகவல்கள்
தலைப்பை பார்த்து குழம்ப வேண்டாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்து வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் புல்லட் கிளாசிக் மோட்டார்சைக்கிளை விஜய் பயன்படுத்தியிருக்கிறார். அசகாய சூரன் ராணுவ வீரராக மிரட்டியிருக்கும் விஜயின் கதாபாத்திரத்தின் கம்பீரத்தை புல்லட்டும் கூட்டியுள்ளது என்றால் மிகையாது.
மேலும், அந்த பாத்திரத்தின் மிடுக்கு குலையாமல் இருப்பதற்கு புல்லட்டை தவிர வேறு எந்த மோட்டார்சைக்கிளை பயன்படுத்தியிருந்தாலும் எடுத்து காட்டியிருக்காது. துப்பாக்கியில் நடிகர் விஜய்யின் பாத்திரத்துக்கு வலுவூட்டிய ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளின் ஒரு சில அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

கம்பீரத்தின் மறுபெயர்
மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களில் கம்பீரமான தோற்றம் கொண்டது. தலை முதல் கால் வரை அதாவது ஹெட்லைட் முதல் டெயில் லைட் வரை வடிவமைப்பு ஒவ்வொன்றும் பரவசத்தை ஏற்படுத்தும்.

எஞ்சின்
இந்த மோட்டார்சைக்கிளில் ட்வின்ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட 346 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 19.8 பிஎச்பி ஆற்றலையும் 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் எஞ்சின் இது.

கியர் பாக்ஸ்
5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் புல்லட்டை கிக்கர் மூலம் ஸ்டார்ட் செய்வதே பெரிய கலையாக கருதப்பட்டது. ஆனால், தற்போது செல்ஃப் ஸ்டார்ட்டர் வசதியுடன் கிடைக்கிறது.

ஓட்டும்போது தடதடக்குமா?
தோற்றத்தில் பார்க்க மிரட்டலாக இருந்தாலும் இந்த வண்டியை ஓட்டும்போது கிடைக்கும் சுகத்தை வார்த்தைகளில் சொல்ல இயலாது. அத்துனை சிறப்பான ரைடிங் அனுபவத்தை தரும்.

பவர்ஃபுல் ஹெட்லைட்
60 வாட் ஹாலோஜன் ஹெட்லைட் கொண்டிருப்பதால் இரவு நேர பயணத்தையும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். வலுவான பிரேக்கிங் சிஸ்டம், நீடித்துழைக்கும் தரம் என புல்லட்டின் பெருமைகள் அனைவரும் அறிந்ததே.

சாகா வரம்
அம்பாசடர் காருக்கும், புல்லட்டுக்கும் சாகா வரம் பெற்றவை என்று கூறுவதுண்டு. காரணம், எத்துனை ஆண்டுகள் ஆயினும் இத்து போன அம்பாசடரையும், புல்லட்டையும் பாகங்களை மாற்றி புத்தம் புதுசு போல் மாற்ற முடியும் என்பது கூடுதல் சிறப்பு. பழைய புல்லட்டை வாங்க விரும்பி விலையை கேட்டுப் பார்த்தாலே இதன் மகிமை புரிந்துவிடும்.

விலை
சென்னையில் ரூ.1.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புல்லட் கிளாசிக் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








