வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கிய 'குத்து' ரம்யா!
முன்னாள் குத்து ரம்யாவான இந்நாள் திவ்யா வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் வாங்கியிருக்கிறார். கன்னட கலை உலகில் கால் பதித்த திவ்யா குத்து படம் மூலம் ரம்யா என்ற பெயரில் தமிழுக்கு வந்து பிரபலமானார். புண்ணியவானுக்கு அடுத்து(திவ்யாவின் காதலர் ரபேல் பெயரின் அர்த்தம் புண்ணியவானாம்) ஸ்கூட்டர் மீது திவ்யாவுக்கு தீராத காதல் இருந்து வந்துள்ளது. அதை தற்போது வெஸ்பா ஸ்கூட்டர் மூலம் நிறைவேற்றியிருக்கிறார். சென்னையிலுள்ள வெஸ்பா ஷோரூமில் சமீபத்தில் இந்த ஸ்கூட்டரை டெலிவிரி பெற்றிருக்கிறார். பிரிமியம் ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெஸ்பாவும் நானும்..!!
தான் ஆசை ஆசையாய் வாங்கியிருக்கும் வெஸ்பா ஸ்கூட்டருடன் போஸ் கொடுக்கும் திவ்யா.

வெஸ்பா எல்எக்ஸ் 125
கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு வந்த வெஸ்பா எல்எக்ஸ் 125 பிரிமியம் ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் பாரம்பரியமிக்க அதேசம்யம் ஸ்டைலான வடிவமைப்புதான் இந்த ஸ்கூட்டரை பிரிமியம் ரகத்தில் சேர்த்துள்ளது.

என்ன விலை இந்த அழகு?
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.75,000 ஆன்ரோடு விலையில் வந்தது. ஆனால், சமீபத்தில் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் விலையை பியாஜியோ ரூ.6,500 வரை குறைத்தது நினைவிருக்கலாம்.

எஞ்சின்
வெஸ்பா ஸ்கூட்டரில் 10.6 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 125 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஜியால்லோ லைம் கலர்ல.. அப்பப்பா..!!
மொத்தம் 6 கலர்களில் வெஸ்பா எல்எக்ஸ் 125 விற்பனை செய்யப்படுகிறது. இதில், திவ்யா ஜியால்லோ லைம் வண்ணத்தை தேர்வு செய்து வாங்கியிருக்கிறார்.

இது அந்த 'புண்ணியவான்' இல்லீங்கோ!
இந்த ஸ்கூட்டர் மோனோகாக் ஃபிரேமில் வடிவமைக்கப்படுவதால் சிறந்த கையாளுமையை வழங்கும். படத்தில் இருப்பது திவ்யாவின் புண்ணியவான் இல்லை.


Click it and Unblock the Notifications








