இன்று முதல் பைக், ஸ்கூட்டர்களின் விலை உயர்கிறது!

Yamaha Scooter
பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதையடுத்து, பைக்குகளின் விலை 6 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் இன்று முதல் இந்த விலை உயர்வை அமலுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளன.

பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறை மீது அதிக வரிச் சுமையை மத்திய அரசு ஏற்றியுள்ளது. ஒரு பக்கம் எரிபொருள் விலை உயர்வால் மாத வருமான வர்க்கத்தினர் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது வாகனங்களின் விலையும் உயர்ந்துள்ளது.

பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரி உயர்வை பெரும்பாலான ஆட்டமொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர் தலையில் முழு சுமையையும் கட்டி வருகின்றன. கார்களின் விலையை அனைத்து நிறுவனங்களும் உயர்த்திவிட்டன.

இதனை பின்பற்றி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை ரூ.600 முதல் ரூ.2000 வரை உயர்த்தியுள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் மோட்டார் சைக்கிள்களின் விலையை ரூ.883 முதல் ரூ.3,400 வரை அதகரித்துள்ளது. ஸ்கூட்டர்களின் விலையை ரூ.826 முதல் ரூ.996 வரை உயர்த்தியுள்ளது.

அடுத்து டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை ரூ.780 முதல் ரூ.1,580 வரையும், ஸ்கூட்டர்களின் விலையை ரூ.780 முதல் ரூ.900 வரை அதகரித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் கார் விற்பனை சரிவடைந்த நிலையிலும், இருசக்கர வாகனங்களின் விற்பனை தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு விற்பனையில் சிறிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (சியாம்) தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 1, 2012, 10:43 [IST]
English summary
After car buyers, two- wheeler buyers will take the additional burden. Most of the two- wheeler companies has announced price hike of their products by 6- 12 per cent from today to offset the high input cost and the hike is excise duty in the union budget.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+