சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான உயிர் காக்கும் காற்றுப் பை!

Cyclist Air Bag
கார்களில் டிரைவர் மற்றும் பயணிகளை காக்கும் காற்றுப் பைகள் போன்று, சைக்கிள் ஓட்டுபவர்களை பாதுகாக்கும் புதிய காற்றுப் பையை(ஏர் பேக்) ஸ்வீடனை சேர்ந்த பல்கலைகழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

கார்கள் விபத்தில் சிக்கும்போது உள்ளே இருக்கும் பயணிகளை காக்கும் வகையில் உயிர் காக்கும் காற்றுப் பைகள் அறிமுகம் செய்யப்பட்டன. பிஎம்டபிள்யூ, பென்ஸ் கார்களில் மட்டுமே வந்து கொண்டிருந்த இந்த அரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு தற்போது மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் பட்ஜெட் கார்களிலும் கிடைக்கிறது.

மேலும், ரேஸ் பைக் ஓட்டும் வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட காற்றுப் பை குறித்தும் ஏற்கனவே நாம் எழுதியிருந்தோம். இந்த நிலையில், சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக பிரத்யேக உயிர் காக்கும் காற்றுப் பையை ஸ்வீடன் பல்கலைகழகத்தை சேர்ந்த 2 இணைந்து மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகள் அவர்களது அயராத முயற்சியில் தற்போது இந்த காற்றுப் பை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. சைக்கிள் மீது வாகனங்கள் மோதினாலோ அல்லது கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளில் செல்பவர் கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டாலோ இந்த காற்றுப் பை விரிந்து தலையை பாதுகாக்கும்.

விபத்துக்களில் சிக்குபவர்கள் பெரும்பாலானோர் தலையில் பலத்த காயம் ஏற்படுவதாலேயே உயிரிழக்கின்றனர். எனவே, இந்த புதிய உயிர் காக்கும் காற்றுப் பை மூலம் அதுபோன்ற மரணங்களை தவிர்க்க முடியும் என்கின்றனர் இதை வடிவமைத்த மாணவர்கள்.

வணிக ரீதியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த உயிர் காக்கும் காற்றுப் பை ரூ.13,000 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 18, 2012, 10:20 [IST]
English summary
Here is an innovative safety invention for cyclists. Two students of a Swedish university, over a period of six years, have developed an airbag for cyclists named Hvvding, roughly translated into English as the 'Chieftain'.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+