டிவிஎஸ் ஸ்கூட்டியின் விளம்பர தூதராக அனுஷ்கா நியமனம்

கல்லூரி மாணவிகளின் இன்றியமையாத அணிகலன்களில் ஒன்றாக ஸ்கூட்டி இருக்கிறது. இலகு எடை, எளிய கையாளுமை ஆகியவற்றுடன் ஸ்லிம்மான வடிவமைப்பும் ஸ்கூட்டியின் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில், ஸ்கூட்டியின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ்.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் கோயிந்தி கூறுகையில்,"ஸ்கூட்டியை விளம்பரம் செய்ய ஸ்லிம் கேர்ள் அனுஷ்கா மிக பொருத்தமானவர் என்பதால் அவரை உடனடியாக தேர்வு செய்தோம்.
எங்களது ஸ்கூட்டி பிராண்டை இளைய சமுதாயத்தின் மத்தியில் எடுத்துச் செல்ல அனுஷ்காவின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இதன்மூலம், ஸ்கூட்டி பிராண்டு மேலும் பிரபலமாகும்," என்றார்.


Click it and Unblock the Notifications








