சொகுசு ஸ்கூட்டரை தயாரிக்கும் ஆடி நிறுவனம்

லண்டனில் ஆடி நிறுவனத்தின் முதல் டிஜிட்டல் கார் ஷோரூம் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ஆடி நிறுவனத்தின் உயரதிகாரி, நகர்ப்புற நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய இருசக்கர வாகனத்தை தயாரித்து வருவதாக தெரிவித்தார்.
ஆனால், இதுபற்றிய அதிக விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இதனால், அது ஸ்கூட்டர் மாடலா அல்லது பைக் மாடலா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அது சொகுசு ஸ்கூட்டராகத்தான் இருக்கும் என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய ஸ்கூட்டரை டுகாட்டியின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் ஆடி உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்கூட்டரை தனியாக விற்பனை செய்யாமல் தனது கார் மாடல்களுடன் சேர்த்து விற்பனை செய்யவும் ஆடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








