80 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய சைக்கிள்: இது ஆடியின் தயாரிப்பு

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் அசத்தலான புதிய எலக்ட்ரிக் சைக்கிளை தயாரித்துள்ளது.

'ஆடி இ-பைக் வொர்த்தர்சீ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சைக்கிள் பன்முக பயன்பாட்டு வசதிகளை கொண்டிருக்கிறது.

இந்த எலக்ட்ரிக் சைக்கிளை காலால் மிதித்தும் ஓட்டவும், சோர்வடைந்தால் இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி ஹாயாக பறக்க முடியும்.

Audi E Bike

இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 5 விதமான பட்டன் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ப்யூர் என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டலாம். எலக்ட்ரிக் மோட்டார் வேலை செய்யாது.

'பெடலெக்' என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டும்போது, எலக்ட்ரிக் மோட்டாரும் சைக்கிள் செல்ல சிறிது விசை கொடுத்து துணைபுரியும். இதில், அதிகபட்சம் 50 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

'இ-க்ரிப்' பட்டனை அழுத்தினால் எலக்ட்ரிக் மோட்டாரில் மட்டுமே இயங்கும். ஆனால், 31 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இதற்கு கியர் ஷிப்டிங் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர, டச் ஸ்கீரினும் உதவி புரிகிறது.

பவர் மோட் பட்டனை அழுத்தும்போது சைக்கிள் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும். இதன்மூலம், அதிகபட்சம் 80 கிமீ வேகத்தில் இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் பறக்கலாம்.

இதன் எல்இடி விளக்குகள் சரம் ஆடி பிராண்டு தயாரிப்பு என்பதை நினைவூட்டுகிறது. இந்த எலக்ட்ரிக் சைக்கிள் பந்தய மோட்டார்சைக்கிள்கள் வடிவமைக்கப்படும் தொழில்நுட்ப கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆடியின் இந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிளின் விலை உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 22, 2012, 12:11 [IST]
English summary
German premium carmaker Audi has developed a new e-bike called "Audi e-bike Worthersee", built on motor racing design principles which can run up to 80 km per hour.
மேலும்... #audi #two wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+