ஹீரோ மார்க்கெட்டை உடைக்க 3-வது 100சிசி பைக்கை களமிறக்கும் பஜாஜ்

100சிசி பைக் மார்க்கெட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் கோலோய்ச்சி வருகிறது. ஸ்பிளண்டர் மற்றும் பேஷன் ஆகிய 100சிசி பைக்குகள்தான் அந்த நிறுவனத்தின் விற்பனையில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த இரு மாடல்களுக்கும் போட்டியாக பிளாட்டினா மற்றும் டிஸ்கவர் 100 பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஹீரோ மார்க்கெட்டை உடைத்து தனது பங்களிப்பை அதிகரித்துக் கொள்வதற்காக 3-வது 100 சிசி பைக்கை மார்க்கெட்டில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது பஜாஜ் ஆட்டோ. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த பாக்ஸர் பைக்கின் பிளாட்பார்மிலேயே புதிய பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புதிய பைக்கில் உலோகங்களுக்கு மாற்றாக ஃபைபர் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அதிக மைலேஜ் வழங்கும் என்பதோடு விலை குறைவாகவும் விற்பனை செய்ய முடியும். இந்த புதிய பைக் 40,000 ரூபாய் ஆரம்ப விலையில் வர இருப்பதாக பஜாஜ் ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் மிகக் குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் வர இருப்பதால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு மார்க்கெட்டுகளிலும் முக்கிய இடத்தை விரைவாகவே பிடிக்கும் என்று பஜாஜ் ஆட்டோ நம்புகிறது.


Click it and Unblock the Notifications








