பைக் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் பஜாஜ் ஆட்டோ!

Discover
பைக் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. இதற்காக, புதிய முதலீடுகளையும் அந்த நிறுவனம் செய்ய உள்ளது.

நாட்டின் பைக் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தொடர்ந்து வர்த்தக விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தவிர, பைக் ஏற்றுமதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதனால், எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் வந்துவிட்டது. தற்போது ஆண்டுக்கு 4.5 மில்லியன் பைக்குகளை உற்பத்தியை செய்யும் திறனை கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டு முடிவில் பைக் உற்பத்தியை ஆண்டுக்கு 5.7 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக புதிதாக எவ்வளவு முதலீடு செய்யப்படும் என்ற விபரங்களை தெரிவிக்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது.

ஒரே நேரத்தில் பைக் உற்பத்தியை கணிசமாக கூட்டுவதாக பஜாஜ் அறிவித்துள்ளது போட்டியாளர்களை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 6, 2012, 14:14 [IST]
English summary
Country's second largest bike manufacturer Bajaj Auto is planning to increase its annual production capacity to 5.7 million vehicles by the end of the current financial year, from 4.5 million.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+