அடுத்த ஆண்டு இந்தோனேஷியாவில் களமிறங்கும் பஜாஜ் ஆட்டோ

ஜப்பானிய நிறுவனமான கவாஸாகி நாட்டின் மிகப் பெரிய பைக் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் கீழ் செயல்பட்டு வருகிறது. கவாஸாகி நிறுவனத்துக்கு ஏற்கனவே சர்வதேச சந்தையில் நல்ல அறிமுகம் உள்ளது.
மேலும், கடந்த 2004ம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் இரு நிறுவனங்களும் இணைந்து மோட்டார்சைக்கிள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டு பைக் மார்க்கெட்டில் 45 மார்க்கெட் பங்களிப்பை இந்த கூட்டணி பெற்றுள்ளது.
எனவே, இதே பாணியில் புதிய வெளிநாட்டு மார்க்கெட்டுகளிலும் கால் பதிக்க இருப்பதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது. முதலாவதாக, அடுத்த ஆண்டு மத்தியில் இந்தோனேஷியாவில் இந்த கூட்டணி அடியெடுத்து வைக்கிறது.
இந்தோனேஷிய மார்க்கெட்டுக்க தக்கவாறு தனது மாடல்களில் சில திருத்தங்கள் செய்யவும் பஜாஜ் முடிவு செய்துள்ளது. ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பை கவாஸாகியும், குறைந்த சிசி எஞ்சின் மற்றும் சாதாரண ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகள் தயாரிப்பை பஜாஜ் ஆட்டோவும் கவனித்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








