பல்சர், பிளாட்டினா விலையை உயர்த்திய பஜாஜ்

பல்சர் மற்றும் பிளாட்டினா பைக்குகள் விலையை ஒரு சதவீதம் உயரத்தியுள்ளது பஜாஜ் ஆட்டோ.

மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோவின் விற்பனையில் பல்சர் வரிசை பைக்குகள் முக்கிய இடம் வகிக்கிறது. இதேபோன்று, கிராமப்புற மார்க்கெட்டில் பிளாட்டினா பஜாஜ் ஆட்டோவுக்கு கைகொடுத்து வருகிறது.

Bajaj Bikes

இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை கருத்தில்க்கொண்டு பைக்குகளின் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது பஜாஜ். ஆனால், தற்போது அதிகரித்துள்ள உற்பத்தி செலவீனத்தை கருத்தில்க்கொண்டு பல்சர் மற்றும் பிளாட்டினா விலையை ஒரு சதவீதம் பஜாஜ் ஆட்டோ உயர்த்தியுள்ளது.

இதனால், பிளாட்டினா விலை ரூ.400 வரையிலும், பல்சர் வரிசை பைக்குகள் விலை ரூ.650 வரையும் அதிகரிக்கிறது.

அதேவேளை, மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோவுக்கு முக்கிய இடம் அளித்து வரும் டிஸ்கவர் வரிசை மீது பஜாஜ் ஆட்டோ கை வைக்கவில்லை. இன்று புதிய டிஸ்கவரை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்ய உள்ளதும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 14, 2012, 16:20 [IST]
English summary
If you are planning to buy new Bajaj Pulsar and Platina to must read this new update. Bajaj Auto has increased the prices of Bajaj Pulsar Series and Bajaj Platina by 1 percent.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+