பிரிமியம் அம்சங்களுடன் புதிய டிஸ்கவரை அறிமுகப்படுத்தும் பஜாஜ்

கடந்த மாதம் திறந்தமேனி வடிவமைப்பு தத்துவத்தில் புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியது. விரைவில் விற்பனைக்கு வரும் இந்த புதிய பல்சர் 200என்எஸ் பழைய பல்சர் மாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்ப கொண்டிருக்கிறது. பெயரில் மட்டும்தான் பல்சர்.
இதேபோன்று, தற்போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் புதிய டிஸ்கவரை பஜாஜ் ஆட்டோ விரைவில் களமிறக்குகிறது. இந்த புதிய டிஸ்கவர் வடிவமைப்பில் மட்டுமின்றி தொழில்நுட்பம் மற்றும் வசதிகளிலும் பல புதுமைகளை கொண்டிருக்கும்.
தற்போது இந்த புதிய டிஸ்கவரின் இறுதிகட்ட சாலை சோதனை ஓட்டங்கள் புனே வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது. படத்தில் ரகசியமாக சோதனை செய்யப்படும் புதிய டிஸ்கவரைத்தான் பார்க்கிறீர்கள். எனவே, விரைவில் இந்த புதிய டிஸ்கவரை பஜாஜ் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








