அடுத்த ஆண்டு 350 பல்சரை களமிறக்கும் பஜாஜ் ஆட்டோ

கடந்த இரு தினங்களுக்கு முன் நேக்டு ஐ ஸ்டைல் வடிவமைப்பை கொண்ட புதிய 200சிசி பல்சர் பைக்கை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்தது. வரும் ஏப்ரலில் இந்த பைக் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்சரிலும், இதற்கு சில நாட்கள் முன் பஜாஜ் அறிமுகம் செய்த கேடிஎம் டியூக் 200 பைக்கிலும் தொழில்நுட்பங்களிலும், வடிவமைப்பிலும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த இரண்டு பைக்குகளையும் பஜாஜ் ஆட்டோவின் ஒரே எஞ்சினியர் குழுதான் வடிவமைத்துள்ளது.
இந்த நிலையில், புதிய பல்சர் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், அடுத்த ஆண்டு புதிய 350 சிசி திறன் கொண்ட பல்சர் பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
200சிசி பல்சரை வடிவமைத்த அதே எஞ்சினியர்கள்தான் 350 சிசி பல்சரையும் வடிவமைத்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், 350 சிசி பல்சரை போன்று 350 சிசி கேடிஎம் டியூக் ஸ்போர்ட்ஸ் பைக்கையும் அடுத்த ஆண்டு பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்ய உள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு பைக்குகளும் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








