ஜனவரியில் புதிய 100சிசி பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ்

நம் நாட்டில் 100சிசி ரக பைக்குகள்தான் அதிகம் விற்பனையாகின்றன. ஹீரோ ஸ்பிளென்டர், பஜாஜ் பிளாட்டினா, டிஸ்கவர் ஆகிய பைக்குகள் இந்த மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், ஹோண்டா பெயர் இல்லாததால் ஹீரோவின் மார்க்கெட்டில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்கும் வகையில் பஜாஜ் ஆட்டோ புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் முனைப்பில் இருக்கிறது.
வரும் ஜனவரியில் புதிய 100சிசி பைக்கை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. சவாலான விலையில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய பைக் வர இருக்கிறது. இந்த புதிய பைக் மூலம் நிச்சயம் தனது மார்க்கெட் உயரும் என பஜாஜ் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
புதிய 100சிசி பைக்கை உறுதிப்படுத்தியிருக்கும் பஜாஜ் ஆட்டோ அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் இதர விபரங்களை கூற மறுத்துவிட்டது. இருப்பினும், பிளாட்டினா மற்றும் டிஸ்கவர் பைக்குகளுக்கு இடையிலான விலையிலும் நிறைவான அம்சங்களுடன் புதிய பைக் வரும் என தெரிகிறது.
மேலும், புதிய பைக்கை தனது பாக்ஸர் பிராண்டு பெயரிலேயே களமிறக்கவும் பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த புதிய பைக்கின் சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனவே, ஜனவரியில் இந்த பைக் நிச்சயம் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








