மேம்படுத்தப்பட்ட புதிய நிஞ்சா 650ஆர் பைக்: பஜாஜ் அறிமுகம்
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய கவாஸாகி நிஞ்சா 650ஆர் சூப்பர் பைக்கை சற்றுமுன் அறிமுகப்படுத்தியிருக்கிறது பஜாஜ் ஆட்டோ.
கவாஸாகியின் நிஞ்சா வரிசை பைக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. முதல் பார்வையிலேயே சுண்டி இழுக்கும் வடிவமைப்பு, சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின் என நிஞ்சா பைக்குகள் தனி மதிப்பை பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில், கூடுதல் அம்சங்களுடன் மற்றும் வடிவமைப்பில் சில மாற்றங்களுடன் நிஞ்சா 650ஆர் பைக் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கை இன்று பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.
உயரமான பெட்ரோல் டேங்க், ஸ்பிளிட் இருக்கைகள், புதிய சஸ்பென்ஷன், அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்ட முன்பக்கை வைன்ட் ஸ்கிரீன் என புதிய அம்சங்களுடன் நிஞ்சா 650ஆர் வந்துள்ளது. வரும் 14ந் தேதி நிஞ்சா 650ஆர் பைக்குக்கு புக்கிங் திறக்கப்படுகிறது.
இன்னும் ஒரு மாதத்தில் நிஞ்சா 650ஆர் பைக் டெலிவிரி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் நேக்கட் வெர்ஷனை இப்போதைக்கு அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications









