ரூ.1.17 லட்சம் விலையில் கேடிஎம் டியூக் 200: பஜாஜ் அறிமுகம்

KTM Duke200
ரூ.1.17 லட்சம் விலையில் 200சிசி திறன் கொண்ட கேடிஎம் டியூக் ஸ்போர்ட்ஸ் பைக்கை பஜாஜ் ஆட்டோ சற்றுமுன் அறிமுகம் செய்தது. அறிமுகச் சலுகையாக அறிவிக்கப்பட்ட இந்த விலை விரைவி்ல உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் ஆப்ரோடு மற்றும் ஸ்டீரிட் பைக் தயாரிப்பில் புகழ்பெற்றது. ஐரோப்பிய சந்தையில் இரண்டாவது பெரிய பைக் தயாரிப்பாளர் என்ற பெருமையை கேடிஎம் பெற்றுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகள் பஜாஜ் ஆட்டோ வசம் இருக்கிறது.

இந்த நிலையில், தனது ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டை வலுப்படுத்தும் விதமாக கேடிஎம் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்திருந்தது. அதிக திறன் மற்றும் அரக்கத்தனமான வடிவமைப்பு கொண்ட கேடிஎம் பைக்குகள் மூலம் தனது ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டை வலுப்படுத்தவும் பஜாஜ் முடிவு செய்தது.

மேலும், கேடிஎம் பிராண்டில் முதலாவதாக டியூக் 200 ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரூ.1.17 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கேடிஎம் டியூக் 200 பைக்கை பஜாஜ் ஆட்டோ மார்க்கெட்டில் இன்று அறிமுகம் செய்தது.

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த பைக்கில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் 199.6 சிசி லிக்யுடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 25பிஎச்பி பவரையும்,19 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நாடு முழுவதும் உள்ள பஜாஜ் ஆட்டோவின் 34 புரோ பைக்கிங் ஷோரூம்கள் (200 சிசிக்கு மேல் திறன் கொண்ட பைக்குகளுக்கான பஜாஜ் ஆட்டோவின் பிரத்யேக ஷோரூம்கள்)மூலம் கேடிஎம் டியூக் 200 பைக்குகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பஜாஜ் புரோ பைக்கிங் ஷோரூம் முகவரி:

பழைய எண்:6, புதிய எண்:11, தேவ் ரிஜென்ஸி,

முதல் மெயின் ரோடு, காந்தி நகர்,

அடையார், சென்னை-20

போன் நம்பர்கள்: 044-64531111,64501103/04/05/06

இமெயில்: [email protected]

(கேடிஎம் டியூக் பைக்கின் கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

More from DriveSpark

Article Published On: Tuesday, January 24, 2012, 15:17 [IST]
English summary
Country's second largest two wheeler maker Bajaj auto has launched KTM Duke 200 sports bike in India. The New KTM Duke 200 is equipped with 200 cc liquid cooled engine and priced at Rs.1.17 lakh.(Delhi Ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+