சென்னையில் புதிய பல்சருக்கு புக்கிங் துவக்கம்: விபரங்கள்

பஜாஜ் பல்சர் 200என்எஸ்
சென்னையில் புதிய பல்சருக்கு புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முன்பணம் பெற்றுக்கொண்டு புக்கிங் செய்யப்படுகிறது.

பல்சர் வரிசை பைக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக மவுசு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை தக்கவைத்து வருகிறது பல்சர் மாடல்கள்.

இந்த நிலையில், பல்சர் வெற்றியை தக்க வைக்கும் விதமாக அசத்தலான வடிவமைப்புடன் புதிய பல்சரை கடந்த பிப்ரவரியில் பஜாஜ் ஆட்டோ முதன்முறையாக பார்வைக்கு காட்டியது.

பார்த்தவுடன் கவரும் மிரட்டலான வடிவமைப்பு வாடிக்கையாளர் மத்தியில் ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியது. கடந்த ஏப்ரலிலேயே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய பல்சர் அறிமுகத்தை பஜாஜ் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது.

ஆனால், எந்த அறிவிப்பும் இல்லாமல் தற்போது பல்சர் பைக்கை தனது சொந்த மண்ணான புனேயில் அறிமுகம் செய்துள்ளது பஜாஜ். ரூ.84,096 என்ற ஆரம்ப விலையில் புனேயில் பல்சர் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும், புனேயில் 5 வாடிக்கையாளர்களுக்கு பல்சர் டெலிவிரி கொடுக்கப்பட்டு விட்டதாக பஜாஜ் ஆட்டோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், சென்னயிலும் புதிய பல்சர் 200என்எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முன்பணம் பெற்றுக்கொண்டு புக்கிங் செய்யப்படுகிறது.

சென்னையில் ஆன்ரோடு விலை ஒரு லட்சத்தை தாண்டும் என சென்னையிலுள்ள பஜாஜ் ஆட்டோ டீலர் ஒருவர் தெரிவித்தார். தற்போது புக்கிங் செய்தால் வரும் ஆகஸ்ட் மாதம் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 8, 2012, 10:51 [IST]
English summary
India's second largest two wheeler maker Bajaj auto has launched much awaited new Pulsar 200NS in Pune at Rs.84,096. The first Pulsar 200NS hits the road and Keys were handed out to the first 5 customers at a ceremony in Pune.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+