வரும் 14ந் தேதி பல்சர் இல்லை.. புதிய டிஸ்கவரை அறிமுகப்படுத்தும் பஜாஜ்

கடந்த பிப்ரவரி மாதம் திறந்தமேனி வடிவமைப்பு தத்துவத்தில் புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியது. விரைவில் விற்பனைக்கு வரும் இந்த புதிய பல்சர் 200என்எஸ் பழைய பல்சர் மாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்ப கொண்டிருக்கிறது. பெயரில் மட்டும்தான் பல்சர்.
இதேபோன்று, தற்போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் புதிய டிஸ்கவரை பஜாஜ் ஆட்டோ வடிவமைத்துள்ளது. இந்த புதிய டிஸ்கவர் வடிவமைப்பில் மட்டுமின்றி தொழில்நுட்பம் மற்றும் வசதிகளிலும் பல புதுமைகளை கொண்டிருக்கும்.
வரும் திங்கட்கிழமை இந்த புதிய டிஸ்கவரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது பஜாஜ் ஆட்டோ. முதலில் பல்சர்தான் திங்கட்கிழமை விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.


Click it and Unblock the Notifications








